உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கல்வி மாவட்டத்தில் இரு அரசு பள்ளிகள் தேர்வு

 கல்வி மாவட்டத்தில் இரு அரசு பள்ளிகள் தேர்வு

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இரு அரசு பள்ளிகள், சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மதுக்கரை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என, இரண்டு பள்ளிகள், சிறந்த அரசு பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இது குறித்து வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல், கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் பங்களிப்பது உள்ளிட்ட, 60 முதல் 65 பிரிவுகளின் கீழ் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ