உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா புகைத்த இருவர் கைது

கஞ்சா புகைத்த இருவர் கைது

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, அங்கலகுறிச்சி மயானம் அருகே ஆழியாறு போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.அங்கு, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், அங்கலகுறிச்சியை சேர்ந்த மாசாணிமுத்து என்கிற சின்னதம்பி,30, ஆனந்தராஜ்,31, ஆகியோர் என்பதும், தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு கஞ்சா விற்றவர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை