மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
7 minutes ago
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
5 hour(s) ago
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சிகள்
5 hour(s) ago
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஊஞ்சவேலாம்பட்டி, செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் கீரியை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கோவை மண்டல வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாட்டுப்பிரிவு, வனக்காவல் நிலைய குழுவினருக்கு தகவல் கிடைத்தது.ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன், துணை இயக்குனர் பார்கவதேஜா அறிவுரையின்படி, வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில், வன களப்பணியாளர்கள், குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு, கோவை மண்டலம் மற்றும் வனக்காவல் நிலைய குழுவினருடன் இணைந்து, ரோந்து சென்றனர்.செல்லப்பம்பாளையம் பிரிவு, ஊஞ்சவேலாம்பட்டி பேக்கரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.அதில், திப்பம்பட்டி கொள்ளுப்பாளையம் எம்.ஜி.ஆர்., காலனி செல்வராஜ்,24, சிவா, 29, ஆகியோர் என்பதும், வெள்ளை நிற சாக்கு பையில், கீரியை விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு, 50ன் கீழ் இருவரையும் கைது செய்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இருவரிடம் நடத்திய விசாரணையில், ஊசி, பாசி விற்கும் தொழில் செய்பவர்கள் என்பது தெரிந்தது. இதுபோன்று குற்றச் செயல்களில் கடந்த காலங்களில் செய்து வந்தனர்.இடைப்பட்ட காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி, மசாலா பொருட்கள் விற்பனை செய்து வந்தனர்.குடும்பத்தில் ஏற்பட்ட பணத்தேவைக்காக கொள்ளுப்பாளையம் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் இருவரும் இணைந்து கீரியை பிடித்து விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்து, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கீரி காப்பு காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
7 minutes ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago