போஸ்ட் ஆபீசுக்குள்ளே நுழைய முடியவில்லை
கோவை : கோவை ராம்நகர் தபால் அலுவலகம் எதிரில், உள்ள சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர்சாலையில் பெருகி ஓடுகிறது. அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.அந்த வழியாக செல்லும் வாகனங்கள், கழிவுநீரை சிதறடித்து கொண்டு செல்வதால், பாதசாரிகள் அந்த ரோட்டில் நடந்து செல்ல கஷ்டப்படுகின்றனர்.தபால் அலுவலகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், கழிவுநீரை தாண்டி உள்ளே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.சாக்கடை அடைப்பை சரி செய்து, சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.