கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் சேவை
கோவை: தீபாவளியை முன்னிட்டு, கோவை -- திண்டுக்கல் இடையே, இன்று முதல் வரும் 6ம் தேதி வரை, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.வரும் 3ம் தேதி ஞாயிறு மட்டும், இந்த ரயில் இயக்கப்பட மாட்டாது. கோவையில் காலை 9:35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடையும்.மறுவழியில் திண்டுக்கல்லில், மதியம் 2:00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், கோவையை மாலை 5:50 மணிக்கு வந்தடையும். போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.