யூரியாவில் கைவைத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை
பொள்ளாச்சி, ; மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரதுஅறிக்கைவருமாறு:கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு,யூரியா 2,576 டன், டி.ஏ.பி., 873 டன், பொட்டாஷ் 2,984 டன், காம்ப்ளக்ஸ் 4,084 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை,தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால், குறைந்தது 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். தரமற்ற, போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.