உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

 உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆனைமலை: கோட்டூர் பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட பி.ஆர்.எம். அவென்யூ செல்லும் ரோட்டில், தனியார் பள்ளிக்கு அருகே, 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ரோட்டில், குடியிருப்பு பகுதி மக்கள், பள்ளி குழந்தைகள் அழைத்துச் செல்லும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. உருக்குலைந்துள்ள இந்த ரோட்டை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: தனியார் பள்ளி அருகே, உருக்குலைந்துள்ள ரோட்டை பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ரோடு மோசமாக இருந்ததால், கிராவல் மண் கொட்டி சரி செய்தோம். தற்போது, குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டியதால், சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இவ்வழியாக செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ரோடு சேறும், சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை