மேலும் செய்திகள்
ஆசிரியர்களை கவுரவிக்கும் 'தினமலர்'
06-Sep-2025
ஒன்பது ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
வால்பாறை; கோவையில் நடந்த விழாவில், வால்பாறையை சேர்ந்த கணித ஆசிரியருக்கு உத்வேக குரு விருது வழங்கப்பட்டது. கோவை எஸ்.எஸ்.வி.எம்., கல்விக்குழுமத்தின் சார்பில், சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு, 'உத்வேக குரு' என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது. விழாவில், வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த கணிதஆசிரியர் வசந்தகுமாருக்கு, உத்வேக விருதினை, 'கூகுள்' கல்வி குழுமத்தின் தலைவர் சஞ்சய்ஜெயின், எஸ்.எஸ்.வி.எம்., கல்விக்குழுமங்களின் தலைவர் மணிமேகலை ஆகியோர் வழங்கி, பாராட்டி பேசினர். விருது பெற்ற ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெற்ற ஆசிரியர் வசந்தகுமார், கடந்தாண்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'லட்சிய ஆசிரியர்' விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
06-Sep-2025
05-Sep-2025