உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்புகழ் பயிலரங்க நிறைவுவிழா

திருப்புகழ் பயிலரங்க நிறைவுவிழா

கோவை: கற்பகம் நிகர்நிலை பல்கலையின் இசைத்துறை சார்பில், திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடந்தது. துணைவேந்தர் ரவி பேசுகையில்,‘‘ பல்கலையின் கல்விச்சேவைக்கு மேலும் சிறப்பு சேர்க்க, இசைத்துறை செயல்படுவது பாராட்டுக்குரியது. மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்,’’ என்றார். ‘டீன்’ ஜனகமாயாதேவி மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். 110 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மாணவர்கள் பெருங்குழுவினராக பாடிய திருப்புகழ் பண்ணிசை விழாவுக்கு சிறப்பு சேர்த்தது. விழாவில், ‘டீன்’ சஜிதா சுகு வரவேற்றார். பதிவாளர் பிரதீப், முதன்மைச் செயல் அலுவலர் முருகையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இசைத்துறை பேராசிரியர் பிரசீதா பால் நன்றியுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை