மாரியம்மன் கோவில் விழாவில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
மேட்டுப்பாளையம்; காரமடை பிளேக் மாரியம்மன் கோவிலின் பூச்சாட்டு விழாவின் ஒருபகுதியாக வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், அண்ணா நகரில் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூச்சாட்டு விழாவின் துவக்க நிகழ்வாக கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியல் பேச்சாளர் நாகநந்தினி, காரமடை நகராட்சி கவுன்சிலர்கள் குருபிரசாத், வனிதா, அனிதா, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் தர்மராஜ் செய்திருந்தார்.விழாவின் ஒரு பகுதியாக நாளை சக்திகரகம் அழைத்தல் நிகழ்வு நடக்கிறது 18ம் தேதி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு போடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், 19ம் தேதி மஞ்சள் நீராட்டு நடத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.---