உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாசக்டமி கருத்தடை முகாம் குடும்ப நலத்துறை ஏற்பாடு

வாசக்டமி கருத்தடை முகாம் குடும்ப நலத்துறை ஏற்பாடு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன 'வாசக்டமி' கருத்தடை முகாம் நடக்கிறது.கோவை மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குநர் கவுரி கூறியதாவது: பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், வரும், 20ம் தேதி, ஆண்களுக்கான நவீன 'வாசக்டமி' கருத்தடை முகாம் நடக்கிறது.இந்த சிகிச்சை சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களைக்கொண்டு, 10 நிமிடங்களில் இலவசமாக மேற்கொள்ளப்படும்.கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஒவ்வொரு ஆண்களுக்கும், அரசு ஊக்கத்தொகையாக 1,100 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சார்பில் தலா, 1,000 ரூபாய் வீதம் மொத்தம் 3,100 ரூபாய் வழங்கப்படும்.கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதால் எவ்வித பாதிப்பும், பக்க விளைவுகளும் ஏற்படாது. அதேபோல, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் கிடையாது.ஏதேனும் சந்தேகம் இருந்தால் விபரம் அறிய, 97897 80933, 94435 22517, 80728 65541 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்