உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ரோடு வேகத்தடையில் வேகம் குறையாத வாகனங்கள்

சர்வீஸ் ரோடு வேகத்தடையில் வேகம் குறையாத வாகனங்கள்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில் மேம்பாலம் அருகே உள்ள வேகத்தடையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் அதிகளவில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த ரோட்டில் அரசம்பாளையம் பிரிவில் தொடர் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடை தற்போது உயரம் குறைவாக இருப்பதால், ரோட்டில் பயணிக்கும் பெரும்பாலான வாகனங்கள், அதிவேகமாகவே இயக்கப்படுகின்றன. இதனால், ஒரு சில வாகனங்கள் தடுமாறுகின்றன. மேலும், வேகத்தடை அருகில் மேம்பாலம் முடியும் இடம் என்பதால், வாகன விபத்து ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி சர்வீஸ் ரோட்டில் 'ஒன்வே' திசையிலும் வாகனங்கள் செல்வதால், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், வேகத்தடையை குறிப்பிட்ட இடைவெளிகளில் சீரமைக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டில் 'ஒன்வே' திசையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி