உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி மலையேற அனுமதி

வெள்ளியங்கிரி மலையேற அனுமதி

கோவை;கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார், 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். மலை உச்சி மீது அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை சுயம்பு வடிவில் தரிசனம் செய்கின்றனர். பிப்., 1ம் தேதி முதல், மலையேற அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வனத்துறையினர் மறுத்து வந்தனர். பக்தர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். பக்தர்களை அனுமதிக்க வனத்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி வழங்கியது. பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை