உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஸ்வகர்மா நல அமைப்பின் விருதுகள் வழங்கும் விழா

விஸ்வகர்மா நல அமைப்பின் விருதுகள் வழங்கும் விழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி விஸ்வகர்ம நல அமைப்பு 'விஸ்வாஸ்' சார்பில், 'விஸ்வாஸ் வித்யா 2025' எனும் 22வது ஆண்டு கல்வி மேம்பாட்டு விழா நடந்தது. தலைவர் தர்மபூபதி தலைமை வகித்தார். சென்னை இந்தியன் ஆர்த்தோ கேர் சர்ஜிக்கல் தலைவர் ரங்கநாதன் நடராஜன், மணப்பாறை சவுமா கல்வி குழும நிறுவனர் ராஜரத்தினத்துக்கு மஹா விஸ்வகர்மா விருதும், சமுதாய சேவை சங்கமான கோவை விஸ்வகர்மா பண்பாட்டு கழகத்துக்கு சேவா பாரதி விருது, ஆசிரியர் தனுசியாவுக்கு விஸ்வகர்மா உபாத்யாயா பாரதி விருது வழங்கப்பட்டது. தன்னம்பிக்கை பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு பேசுகையில், 'மாணவர்களுக்கு தற்சமயம் வேண்டப்படும் சுய ஒழுக்கம், ஆசிரியர், பெற்றோரை மதித்தல், கல்வி சிந்தனை, ஆளுமைத்திறன், உடல் நலம் ஆகியவற்றில் கவனம் வைத்து வாழ்க்கையில் உயர்வை பெறுவது குறித்து பேசினார். பொள்ளாச்சி விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளை உயர்மட்டக்குழு உறுப்பினர் கபீர்தாஸ் பேசினார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 35 மாணவர்களுக்கு உயர்கல்வி முடியும் வரை உதவித்தொகைகள், தகுதி அடிப்படையில், 3 லட்சம் ரூபாய் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ