உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குருடம்பாளையம் ஊராட்சியில் காத்திருப்பு போராட்டம்

குருடம்பாளையம் ஊராட்சியில் காத்திருப்பு போராட்டம்

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சீரான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நான்காவது வார்டில் உள்ள பூங்காவை மேம்படுத்துவது, ஊராட்சி அலுவலகம் சுற்றி உள்ள பகுதிகளில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ள கீழ்நிலை, மேல்நிலை தொட்டிகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு மா.கம்யூ., கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,பெரியநாயக்கன்பாளையம் பி.டி.ஓ., ஜென்கின்சிடம் கோரிக்கை மனுவை அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை