உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே, சர்வீஸ் ரோட்டின் ஓரம் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து, கிணத்துக்கடவு வழியாக ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், குழாயில் கசிவு ஏற்பட்டு, கடந்த 2 மாதங்களாக நடைபாதையில் குடிநீர் வழிந்தோடுகிறது.மேலும், இங்கு அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது, அதே இடத்தில் தண்ணீர் கசிவு அதிகரித்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாகி ரோடும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதை கவனித்து குடிநீர் வீணாவதை தடுத்து, உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.மக்கள் கூறியதாவது:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், அடிக்கடி குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ரோட்டில் வழிந்தோடுகிறது. புகார் தெரிவிக்கும் போது, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாகவே சரி செய்து வருகின்றனர்.மேலும், கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், குறிச்சி, குனியமுத்துார் செல்லும் குழாயில் குடிநீர் வீணாகி கால்வாயில் ஓடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு, குடிநீர் கசிவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை