உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நம் கோரிக்கைகளை அடைய உறுதியான மனநிலை வேண்டும்

நம் கோரிக்கைகளை அடைய உறுதியான மனநிலை வேண்டும்

-- நமது நிருபர்-''நாம் வாழ்வதை சிறந்த வாழ்க்கையாக மாற்ற வேண்டியது நம் கையில்தான் உள்ளது. நம் கோரிக்கைகளை அடைய உறுதியான மன நிலை வேண்டும்,'' என்று கவிஞர் கவிதாசன் பேசினார்.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், கவிஞர் கவிதாசன் பேசியதாவது: இது என்னடா வாழ்க்கை என்பதற்கு பதில், இது என்னுடைய வாழ்க்கை என்று கூறும் அளவுக்கு நாம் இருக்க வேண்டும். நாம் வாழ்வதை சிறந்த வாழ்க்கையாக மாற்ற வேண்டியது நம் கையில்தான் உள்ளது. நம் கோரிக்கைகளை அடைய உறுதியான மன நிலை வேண்டும்.கொக்கை தேடி குளம் வராது என்பார்கள். அதுபோல், கல்வி நம்மைத்தேடி வராது; கல்வியை தேடி நாம்தான் செல்ல வேண்டும்.கல்வி கசப்பானது; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. சொந்தக்காரர்கள் கைவிட்டாலும், சொந்தக்கால் கைவிடாது. கல்வியை யாராலும் திருட முடியாது. எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. அதை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்வது நீங்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை