உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வசதிகள் ஏற்படுத்தணும்!

வசதிகள் ஏற்படுத்தணும்!

பஞ்சலிங்கம், பொள்ளாச்சி: அரசு அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு காண வருகின்றனர். ஆனால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அரசு அலுவலகங்களில் குடிநீர் வசதி, இயற்கை உபாதை கழிக்க கழிப்பிட வசதியும் ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் வைத்திருக்க வேண்டும்.கிராமத்தில் மக்களுக்கு பிரச்னை என்றால், அதிகாரிகளிடம் சொல்லலாம். ஆனால், அரசு அலுவலகங்களிலேயே வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். சரவணன், கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு அலுவலகங்களுக்கு, மனு அளிக்க, சான்றிதழ்கள் பெற செல்லும் போது, சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. அரசு அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் இல்லை. வேறு கட்டடத்திற்கு சென்று குடிநீர் பருகும் நிலை உள்ளது. இதை தவிர்க்க தாலுகா அலுவலகத்தின் கீழ் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். காட்சிப்பொருளாக இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பங்கஜாசன், வால்பாறை: வால்பாறையில் பல்வேறு அரசு கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அவைகளை கண்டறிந்து, வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களை அந்த கட் ட டத்திற்கு மாற்ற வேண்டும். அரசு சுற்றுலா தங்கும் விடுதியை, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். ஆனந்தகுமார், உடுமலை: அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்கா க மக்கள் அதிகம் வந்து செல்லும் நிலையில், கட்டடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. கட்டடங்களில் செடிகள் முளைத்துள்ளன. இதனை கூட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விடுவதால், கட்டடம் வலுவிழந்து, ஆபத்தான நிலைக்கு மாறி வருகின்றன. ஒவ்வொரு கட்டடங்களையும் முறையாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை