உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமான நாற்றுகளை நடவு செய்து வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும்

தரமான நாற்றுகளை நடவு செய்து வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழக வனத்துறை பணியாளர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி முகாம் துவங்கியது. இதில் சேலம், தேனி, முதுமலை, நாமக்கல், ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து, 18 வனவர்கள், 18 வனக்காவலர்கள் என, மொத்தம், 36 பேர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் நிஹார் ரஞ்சன் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார்.துறை தலைவர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், நாட்டின் வன வளத்தை அதிகரிக்க, தரமான மர நாற்றுகளை வனப்பகுதிகளில் நடவு செய்ய வேண்டும். விவசாயம் செய்யாத நிலங்களில், மர நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். மரங்கள் வளர்ப்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அதிகமான மரங்களை வளர்க்கும் போது, வெளி நாடுகளில் இருந்து, மரங்கள் இறக்குமதி செய்வது குறையும். வன வளத்தை பாதுகாக்கும் போது, சுற்றுச்சூழல் மாசடைவது குறையும், என்றார். பேராசிரியர்கள் சிவபிரகாஷ், சிவகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வனப்பணியாளர்களை வனக்கல்லூரியில், நாற்றுகளை உற்பத்தி செய்யும், நாற்றங்கால் பகுதிக்கு அழைத்துச் சென்று, தரமான நாற்றுகள் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை