வரவேற்பு தாசில்தார் பேரூருக்கு மாறுதல்
கோவை; பேரூர் தாலுகா அலுவலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்ட, தாசில்தார் ரமேஷ்குமாருக்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் வரவேற்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தாலுகா எல்லைக்குட்பட்ட வருவாய்த்துறை பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பிர்கா வாரியாக உள்ள, ஆர்.ஐ., மற்றும் வி.ஏ. ஓ.,க்கள், தாசில்தார் அலுவலகத்திலுள்ள துணை தாசில்தார்கள், நில அளவையர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், சேவை மனப்பான்மையோடும் பணிபுரிய, தாசில்தார் சேகர் அறிவுரை வழங்கினார்.