உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரவில் சரியான துாக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

இரவில் சரியான துாக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

கோவை:ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில் பிப்., 16ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை 'நிர்வாண ராமாயணம்' என்ற ஆன்மிக சொற்பொழிவு, மாலை, 6:30 முதல் 8:00 மணி வரை நடக்கிறது. இதில், பூஜய் ஸ்ரீ ரமண சரண தீர்த்த சுவாமிகள் (நொச்சூர் ஆச்சார்யாள்) சொற்பொழிவு நிகழ்த்துகிறார். முதல் நாளான நேற்று, பூஜய் ஸ்ரீ ரமண சரண தீர்த்த சுவாமிகள் பேசுகையில், ''மனிதர்கள் மனதில் அகங்காரம் வந்து, ஆசைகள் வரும் போது அமைதியான, சமாதானமான நிலை மறைந்து விடுகிறது. இதனால் தற்போது பலருக்கு துாக்கம் சரியாக வருவது இல்லை. நான் என்ற அகங்காரம் நீங்குவதுதான் இந்த நிலை. விழித்து இருக்கும் போது பல கனவுகள் காணாமல் இருந்தால், நல்ல துாக்கம் வரும். மனதை கட்டுப்படுத்தி நிம்மதியாக இருக்க, கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார். இன்று மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ