உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குடிநீர் வீணாவது எப்போது நிற்கும்?

 குடிநீர் வீணாவது எப்போது நிற்கும்?

போத்தனூர்: சுந்தராபுரம் காமராஜர் நகர், கஸ்தூரி நகர், அசோக் நகர் சாலை சந்திப்புகள் உள்பட, நான்கு இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீர் வழிந்தோடுகிறது. குறிப்பாக, பேக்கரி ஒன்றின் முன் ஏற்பட்டுள்ள உடைப்பிலிருந்து வெளியேறும் நீர், சிறு குளம்போல் சாலையில் தேங்கியுள்ளது. நீர், நிலத்தடியிலிருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறுவதால் சாலையும் சேதமடைகிறது. இதனால் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே நெடுஞ்சாலை துறையிடம், உடைப்பை சரி செய்ய, சாலையை தோண்ட அனுமதி கோரி விண்ணப்பித்தோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனைத்து துறை கூட்டம் நடக்கும் போது மாவட்ட கலெக்டரிடமும் கூறுகிறேன். பொள்ளாச்சி சாலை விரிவு பணிக்காக, குழாய் ஒன்றை மாற்றியமைக்க உள்ளோம். அதற்காக, இரு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அப்போது இப்பணியும் செய்து முடிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை