மனவள கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா
அன்னுார்; அன்னை லோகாம்பாளின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னுார் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா நடந்தது. விழாவில் செயலாளர் செல்வி வரவேற்றார். மன்றத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கோவை அறக்கட்டளையின் துணைத்தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் விழாவை நடத்தி வைத்து பேசுகையில், பிறரை வாழ்த்துவதன் மூலம் மன அமைதியும் மனநலமும் பெறலாம்.தொடர்ந்து தவம் செய்வதால் கோபம், அகம்பாவம், தற்பெருமை, பொறாமை உள்ளிட்ட குணங்க ள் விலகும், என்றார். விழாவில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வாழ்த்தி கொண்டனர். மன்றத்தின் ஆலோசகர் திருவேங்கிடம், துணைத்தலைவர் சுந்தரம், துணை பேராசிரியர் சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.