உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையத்தை சேர்ந்தவர் நித்யா, 39; தனியார் கம்பெனி ஊழியர். இவரது கணவர் துரைசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாரடைப்பால் இறந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த நித்யா தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.தகவல் அறிந்த உறவினர்கள், உடனடியாக நித்யாவை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ