உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டா கேட்டு பெண்கள் காத்திருப்பு போராட்டம்

பட்டா கேட்டு பெண்கள் காத்திருப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம்: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, ஏழு குடியிருப்பு பகுதி பெண்கள், தாசில்தார் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேட்டுப்பாளையம் தாலுகாவில், அரசுக்கு சொந்தமான காலி இடங்களை, வருவாய் துறையினர் பிரித்து, பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் பொது மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம், உக்கான் நகர், வெண்மணி நகர், நடூர், ஜீவானந்தபுரம், குமரபுரம், ஜடையம்பாளையம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்கள், தங்களுக்கு பஞ்சமி நிலத்தில், இடம் ஒதுக்கீடு செய்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேட்டுப்பாளையம் தாசில்தார் ராமராஜ், போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒவ்வொரு பகுதியாக மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டு வருகிறது.அன்னூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற இருப்பதால், அதில் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதைத் தொடர்ந்து மற்ற பகுதி மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார். இதை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை