மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்... ::
08-Aug-2025
வால்பாறை; திருமணமாகாத விரக்தியில் இருந்த எஸ்டேட் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட்டை சேர்ந்தவர் சிவா,34. எஸ்டேட் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகாததால் நாள் தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவா, திருமணமாகாத விரக்தியில் சமையல் அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாய் ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
08-Aug-2025