தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., கோவை ஜில்லா சுமை தூக்கும் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., இ.பி.எப்., ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில், குடியிருப்புகள் ஒதுக்க வேண்டும். மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., கோவை ஜில்லா சுமை தூக்கும் பொது தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சி.ஐ. டி.யு., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஜில்லா தங்க நகை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.