உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக யானைகள் தின விழா; அக்சரம் பள்ளி மாணவி வெற்றி

உலக யானைகள் தின விழா; அக்சரம் பள்ளி மாணவி வெற்றி

பெ.நா.பாளையம்; உலக யானைகள் தின விழாவையொட்டி நடந்த ஓவிய போட்டியில் மத்தம்பாளையம் அக்சரம் பள்ளி மாணவி ஜெயசுதா முதல் பரிசு பெற்றார். டில்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் மற்றும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் உலக யானைகள் தின விழாவையொட்டி ஓவியப்போட்டி நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் அக்சரம் பப்ளிக் பள்ளி மாணவி ஜெயசுதா முதல் பரிசு பெற்றார். மாணவிக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் வழங்கினார். மாணவி ஜெயசுதாவை அக்சரம் பள்ளி தாளாளர் சிவகுமார், செயலாளர் ரமேஷ், முதல்வர் பாப்பிராய் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை