உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவனை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

மாணவனை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

சூலுார்; சூலுார் அருகே பள்ளி மாணவனை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சூலுார் அடுத்த கருகம்பாளையத்தை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவன், கடந்த, 11 ம்தேதி பள்ளியில் இருந்து லிப்ட் கேட்டு, ஒரு வாலிபருடன் பைக்கில் சோமனூர் வந்துள்ளான். அந்த வாலிபர், மாணவனை காடாம்பாடி பகுதிக்கு அழைத்து சென்று மதுபோதையில் அடித்து துன்புறுத்தினார். இதில் காயமடைந்த மாணவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூலுார் போலீசார், அந்த வாலிபரை தேடி வந்தனர். பல பகுதிகளில் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்தனர்.விசாரணையில், கோடங்கி பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார், 29 என்பதும் மீன்பிடிக்கும் தொழிலாளி என்பதும், பைக்கில் மாணவனை கடத்தி சென்று துன்புறுத்தியதும் தெரிந்தது. மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை