உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மா கண்டித்ததால் இளைஞர் தற்கொலை

அம்மா கண்டித்ததால் இளைஞர் தற்கொலை

கிணத்துக்கடவு- கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தை சேர்ந்த இளைஞர் மன உளைச்சலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 27. இவர், கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் பணி புரிந்து வந்தார்.இவருக்கு, சமீப காலமாக குடி பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதை கண்ட இவரது அம்மா வள்ளியம்மாள் கண்டித்துள்ளார். இதில், மனமுடைந்த அருண்குமார் இரவு நேரத்தில் தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை