உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலிபருக்கு அரிவாள் வெட்டு; மூவருக்கு போலீசார் வலை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; மூவருக்கு போலீசார் வலை

போத்தனூர்; கோவை, குனியமுத்தூர், புட்டுவிக்கி சாலை, சேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 23. நேற்று முன்தினம் இவரது உறவினர் கருப்புசாமி வாய்க்கால்பாளையம், பிளாக் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது ஸ்ரீதர் என்பவர், அவருடன் வாக்குவாதம் செய்து தாக்கினார்.இந்நிலையில், நேற்று கருப்புசாமி, சக்திவேலை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். சக்திவேல் அங்கு சென்றபோது, ஸ்ரீதர் தன்னுடனிருந்த செந்தில்குமார், பிரசாந்த் ஆகியோருடன் சேர்ந்து, சக்திவேலை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டி, மரக்கட்டையால் தாக்கினார்.இதில் சக்திவேலின் இடது பக்க தலை, இடது கை கட்டை விரல் மற்றும் முழங்கையில் வெட்டு விழுந்தது. மூவரும் அங்கிருந்து தப்பினர்.சக்திவேல் சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவரது புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் மூவரையும் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி