உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர் : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற்றிட உரிய விண்ணப்பங்களை மாணவ மாணவியர் தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் பெற்று, அக்கல்வி நிலையங்களில் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 2 லட்ச ரூபாயிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு மேற்பட்ட படிப்புக்கான மத்திய கல்வி உதவித்தொகை, விடுதியில் தங்கி பயில்வோருக்கும், விடுதி சாரா மாணவர்களுக்கும் பராமரிப்புப்படி சிறப்புக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை