உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் சிலை கரைக்க அனுமதி மறுப்பால் பரபரப்பு

விநாயகர் சிலை கரைக்க அனுமதி மறுப்பால் பரபரப்பு

திட்டக்குடி: திட்டக்குடி அருகே விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தில் பா.ஜ., வினர் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலம்பாடி பா.ஜ., சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைக்க அப்பகுதியினர் வெலிங்டன் ஏரிக்கு எடுத்து வந்தனர். ஆனால் மெயின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ., ஒன்றிய தலைவர் பொன் பெரியசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கீழ்ச்செருவாய் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ