உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரகு சாகுபடி பற்றி பயிற்சி முகாம்

வரகு சாகுபடி பற்றி பயிற்சி முகாம்

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த அடரி கிராமத்தில், ஊட்டச்சத்து பாதுகாப்பின் வழியாக தீவிர சிறு தானியங்கள் உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ் வரகு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி, வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை துணை இயக்குனர் சந்திரமோகன், வரகு பயிரில் பின்செய் நேர்த்தி மற்றும் வரகு சந்தைப்படுத்துதல் குறித்தும், உதவி இயக்குனர் ராஜலட்சுமி விவசாயிகள் அதிக பரப்பளவில் வரகு சாகுபடி செய்வது குறித்தும் விளக்கினர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் தேவராஜ், கார்த்திகேயன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர். விவசாயிகள் பலர் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ