உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு

ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு

விருத்தாசலம் : ஆலடி ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., முத்துக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துக்குமார் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இருசாளகுப்பம், மாத்தூர், ஆலடி உள்ளிட்ட பகுதிகளில் நன்றி கூறியவர் ஆலடி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் பொருட்கள் இருப்பு, தரம் குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். ஒன்றிய பொருளாளர் செம்பை, மாவட்ட பிரதிநிதி ராமசந்திரன், நிர்வாகிகள் சிவக்குமார், ஜான்லியோ, செந்தில் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி