உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளத்தடுப்பு பணிகளில் அதிகாரிகள் அலட்சியம்

வெள்ளத்தடுப்பு பணிகளில் அதிகாரிகள் அலட்சியம்

கடலூர்:வெள்ளத் தடுப்புப் பணிகளை பொதுப்பணித் துறை முறையாக செய்யாததால் வீராணம் ஏரியில் கூடுதலாக 0.18 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் போனது என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது.கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். அனைத்துத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.ரவீந்திரன்: வெள்ள சேத தடுப்பு பணிகளுக்கு 324 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது 108 கோடி ரூபாய்க்கான பணிகள் நடக்கிறது. பெயரளவிற்கு மண் எடுத்து கரையை பலப்படுத்துகின்றனர். இப்பணிக்கு வீராணம் ஏரியிலிருந்து 45 லட்சம் கன அடி மண் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 9 லட்சம் கன அடி மட்டுமே மண் எடுக்கப்பட்டுள்ளது. முறையாக பணி நடந்திருந்தால் தற்போது வீராணம் ஏரியில் கூடுதலாக 0.18 டி.எம்.சி., தண்ணீர் தேக்கியிருக்கலாம். பொதுப்பணித் துறையின் முறையற்ற பணியாலும், அலட்சியத்தாலும் திட்டத்தின் நோக்கம் பாழ்படுத்தப்பட்டுள்ளது.விஜயகுமார்: அஞ்சலையம்மாள் வாய்காலில் தனியாருக்கு சொந்தமான ஒரு பகுதியை உரிமையாளர் தூர்த்து விட்டதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.வீரபாண்டியன்: விருத்தாசலம் பகுதியில் அறுவடை நேரம் என்பதால் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.(ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தியதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்)ரங்கநாயகி: வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் ராதா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசனத்திற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.வேணுகோபால்: செம்மை கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்.சோமசுந்தரம்: பெண்ணாடம் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு 45 கோடி ரூபாய் அளவில் பாக்கி வைத்துள்ளது. மேலும் வெட்டு கூலியையும் தராமல் உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ