உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கடலுார்: தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருபவர் சையது சதாம் ஹீசேன். கடந்த 7ம் தேதி இவரது கடையில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.18,000 மதிப்புள்ள மொபைல் போன், ரொக்கப் பணத்தை திருடிச்சென்றனர்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, உளுந்துார்பேட்டை அடுத்த கீரனுாரை சேர்ந்த கண்ணன் மகன் அஜித், 25; என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அஜித் மீது விருத்தாசலம், உளுந்துார்பேட்டை பண்ருட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 9க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவரின், தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டருக்கு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார். அதையடுத்து, கலெக்டர் அருண்தம்புராஜ், உத்தரவின்படி அஜித் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள அவரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ