உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

சிறுபாக்கம் : வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் மங்களூரில் நடந்தது. மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 66 ஊராட்சிகள் மற்றும் துணை கிராமங்களில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம், ஒன்றிய பொது நிதி திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. பணிகளின் தற்போதைய நிலை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. பி.டி.ஓ., சுலோச்சனா தலைமை தாங்கினார். கூடுதல் பி.டி.ஓ., செல்வநாயகி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்தல், புதிய பணிகளை தேர்வு செய்தல், பணிகளை அதன் அனுமதி காலத்திற்குள் செய்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. பொறியாளர் மணிவேல், மேலாளர் காமராஜ், அனைத்து ஊராட்சி உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை