10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது
கடலுார்; கடலுாரில் பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த, பிளஸ் 2 மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.கடலுார் பகுதியை சேர்ந்த பத்து வயது சிறுமியை, பிளஸ் 2 படிக்கும் 17வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாய், கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.