திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 100 திருமணங்கள்
கடலுார்: ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளான நேற்று, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 100 திருமணங்கள் நடந்தன.கடலுார் அருகே திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுபமுகூர்த்த நாளில் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வருகின்றனர்.ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளான நேற்று, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், அதிகாலை 4:00 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது. கோவில் திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், அங்குள்ள தனியார் மண்டபத்தில் 25 திருமணங்கள் என 100 திருமணங்கள் நடந்தன. இதனால், திருவந்திபுரம் பகுதியில் அணிவகுத்து நின்ற ஏராளமான வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.