| ADDED : ஜூன் 09, 2024 03:56 AM
கிள்ளை : சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் (தேசிய மக்கள் நீதிமன்றம்), 392 வழக்குகள் முடிக்கப்பட்டு, 6 கோடியே 94 லட்சத்து 79 ஆயிரத்து 206 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிதம்பரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சிவில் வழக்கு, வாகன விபத்து வழக்கு, குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்குகள் என 392 வழக்குகளில், 6 கோடியே 94 லட்சத்து 79 ஆயிரத்து 206 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுகன்யா ஸ்ரீ, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நிஷா, வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகி, பாண்டியன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை இளநிலை நிர்வாக உதவியாளர் தீபிகா செய்திருந்தார்.