உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு இடங்களில் விபத்து புதுச்சத்திரத்தில் 2 பேர் சாவு

இரு இடங்களில் விபத்து புதுச்சத்திரத்தில் 2 பேர் சாவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரத்தில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.கடலுார் அடுத்த குண்டுஉப்பலவாடியை சேர்ந்தவர் ராமதாஸ், 64; கூலித்தொழிலாளி. இவர் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை சாலையோரம் நடந்து சென்ற போது பின்னால் வந்த பைக் மோதியது. படுகாயமடைந்த ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மற்றொரு சம்பவம்

புதுச்சத்திரம் அடுத்த மேல்பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் வாசுதேவன், 60; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த ஸ்விப்ட் கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை