உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் 2 போலீசார் காயம்

விபத்தில் 2 போலீசார் காயம்

கடலுார்: இரு வேறு விபத்துக்களில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பொன் அருவி 39; வடலுார் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் அலுவல் பணி காரணமாக தனது பிளஷர் ஸ்கூட்டியில் (டி.என் 31 பிஜே 0360) கடலுாருக்கு வந்து,. மீண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். சேடப்பாளையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., (டி.என் 31 டிபி 1058) கட்டுப்பாட்டை இழந்து பொன் அருவி ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பொன் அருவி படுகாயம் அடைந்தார். அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே போல், கடலுார் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் மணிவேல் 40; நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் (டி.என் 31 பி.க்யூ 7762) வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் (டி.என் 91 ஏ 2410) மோதியது. படுகாயமடைந்த மணிவேல் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி