உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை

ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை

கடலுார்,- கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை விழா வரும் 20ம் தேதி துவங்குகிறது.கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டுவரும் 20ம் தேதி காலை 9:00 மணிக்கு விஜய விட்டலா மகளிர் அணியின் பஜன் நிகழ்ச்சி நடக்கிறது.21ம் தேதி காலை 9:00 மணிக்கு பாலசந்தர், பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இசை, மாலை 6:00 மணிக்கு ரம்யாஸ்ரீ ஹரிபிரசன்னாவின் வீனை இசைக் கச்சேரி, வாய்ப்பாட்டு, சீனுவாசனின் மிருதங்கம், முகுந்தனின் வயலின் கர்நாடக இசைக் கச்சேரி நடக்கிறது.22ம் தேதி காலை 9:00 மணிக்கு ஹரி ஸ்மரணே அனந்த ஆனந்தா பஜனை மண்டலியினரின்ஹரி பஜன் நடக்கிறது. தொடர்ந்து, ஆராதனை, ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மத்வ சித்தாந்த சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ