உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் மோட்டார் திருட்டு 4 வாலிபர்கள் கைது

மின் மோட்டார் திருட்டு 4 வாலிபர்கள் கைது

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் அருகே மின் மோட்டார் திருடிய நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன், 65; விவசாயி. இவரது வயலில் உள்ள, மோட்டர் கொட்டகையில் வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை கடந்த 18ம் தேதி இரவு, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பைக்கில் மின் மோட்டர் எடுத்துச் சென்ற வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அது மதியழகனின் மோட்டார் என்பதும், அதனை திருடி வந்த விளாகம் கிராமம், வள்ளுவர் தெருவை சேர்ந்த குரு ,22; டி.நெடுஞ்சேரி, முருகன் கோவில் தெரு அரவிந்த்ராஜ் ,23; மகாவிஷ்ணு, 23; மணிவண்ணன், 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மோட்டார் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை