உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதலியை ஏமாற்றிய காதலன் மீது வழக்கு

காதலியை ஏமாற்றிய காதலன் மீது வழக்கு

கடலுார்: காதலியை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கடலுார், கோண்டூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் பிரேம்குமார். இவரும், சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்த திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். பிரேம்குமார் திருமண ஆசைகாட்டி நெருங்கி பழகினார்.அந்த பெண் திருமணம் செய்து கொள்ள கூறியபோது, பிரேம்குமார் வரதட்சணையாக 30 சவரன் நகை, கார் கேட்டுள்ளார். இந்நிலையில், பிரேம்குமார் கடந்த 23ம் தேதி புதுச்சேரி பாகூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் பிரேம்குமார், அவரது தந்தை தட்சணாமூர்த்தி, தாய் மீரா, அக்கா சுகன்யா உள்ளிட்ட 12 பேர் மீது கடலுார் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை