உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திறக்காமலேயே பாழாகும் உடற்பயிற்சி கூடம்: ரூ. 34 லட்சம் வீண்

திறக்காமலேயே பாழாகும் உடற்பயிற்சி கூடம்: ரூ. 34 லட்சம் வீண்

திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சியில் கடந்த 2017-2018ம் ஆண்டு அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அனைத்து வசதிகளுடன் ரூ. 34 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. மந்தமான பணிகளால் உடனடியாக திறக்க முடியாமல்போனது. 2021ல் ஆட்சி மாற்றம் காரணமாக, அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால், அங்கிருந்த விளையாட்டு பொருட்கள, உடற்பயிற்சி கூட கருவிகள் வீணாகியது. இளைஞர்கள் நலன் கருதி, மிகவும் பின்தங்கிய பகுதியில் பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா யாருக்கும் பயனில்லாமல் போனது.இளைஞர்கள் நலன்கருதி ராமநத்தம் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தில் பராமரிப்பு பணிகள் செய்து திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ