உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்டர் மீடியனில் மின் விளக்கு தேவை

சென்டர் மீடியனில் மின் விளக்கு தேவை

கடலுார் : கடலுாரில் சாலை சென்டர் மீடியனில் மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை, ஆல்பேட்டை வழியாக புதுச்சேரி மார்க்கமாக இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து இச்சாலை வழியாக நான்குசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் கடலுார் நோக்கி வருகின்றன.இச்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் ஆல்பேட்டை செக் போஸ்ட்டில் இருந்து, மணிக்கூண்டு வரை சென்டர் மீடியன் சில தினங்களுக்கு போடப்பட்டது. இந்த சென்டர் மீடியனில் இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில், மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே, சென்டர் மீடியனில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை