உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

சிதம்பரத்தில் தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்த தி.மு.க, கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர்.தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து, சிதம்பரம்தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி தொகுதிகளின் செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, திருமாவளவனை அறிமுகப்படுத்தி பேசினார். அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் ஐயப்பன், சிந்தனைச் செல்வன், த.வா.க., வேல்முருகன், ராதாகிருஷ்ணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், கடலூர் தொகுதி காங்.,வேட்பாளர் விஷ்ணு பிரசாத், காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி, அகில இந்திய காங்., உறுப்பினர் மணிரத்தினம், ம.தி.மு.க., மாவட்டசெயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கம், சரவணன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை, மூவேந்தர் முன்னேற்ற கழக செல்வராஜ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ