உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம்

வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், வட்டார தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாலிஹ் மரைக்காயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வர்த்தக சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா செயல்பாடு மீது களங்கம் ஏற்படும் வகையில் வீண் பழி சுமத்தும் நபர்களுக்கு கண்டன தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.செயலாளர்கள் கவிமதி, அபுல் உசேன், நிர்வாகிகள் ஐயப்பன், கார்த்திக், குமார், நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தி தொடர்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை